Advertisment

சலூன் கடையில் கழுத்து மசாஜ் செய்தவருக்கு நேர்ந்த விபரீதம்: மூச்சுக்கோளாறால் அவதி

இப்போது, சுவாசத்தை முறைப்படுத்தும் தொண்டை நரம்பில் கோளாறு ஏற்பட்டு மூச்சுக்கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
saloon, Neck Massage, delhi, health issues, phrenic nerves

சலூன் கடைகளில் முடி வெட்டிய பிறகு பலருக்கும் மிக பிடித்த விஷயம் கழுத்தில் மசாஜ் செய்வது. அப்படித்தான் டெல்லியை சேர்ந்த 50 வயது அஜய்குமாரும் சலூன் கடை ஒன்றில் முடிவெட்டிய பின், கடைக்காரரை மசாஜ் செய்ய சொல்லியிருக்கிறார். அப்படி மசாஜ் செய்ததுதான் விபரீதம். இப்போது, சுவாசத்தை முறைப்படுத்தும் தொண்டை நரம்பில் கோளாறு ஏற்பட்டு மூச்சுக்கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisment

டெல்லியை சேர்ந்த அஜய்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சலூன் கடையில் முடி வெட்டிவிட்டு, கடைக்காரரை வைத்து கழுத்து மசாஜ் செய்திருக்கிறார். இந்நிலையில், வீட்டுக்கு வந்த அஜய் குமார் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டார்.

அதில், சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் தொண்டை நரம்பில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் டயாஃப்ராக்ம் (Diaphragm) எனப்படும் தொண்டை நரம்பு செயலிழந்ததால், அவர் தொடர்ந்து வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, அஜய்குமாரை பரிசோதிக்கும் ஆனந்த் ஜெய்ஸ்வால் கூறியதாவது, “முடி வெட்டியதற்கு பின் சலூன் கடைகளில் வழக்கமாக நிகழ்த்தப்படும் இத்தகைய மசாஜ்கள், கழுத்து நரம்பு, திசுக்கள், தசை, ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும்”, என தெரிவித்தார்.

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment