Advertisment

குருபெயர்ச்சி 2024... இந்த ஆண்டு எந்த ராசிக்கு பலன் அதிகம்? விவாத மேடையில் விளக்கம் தரும் ஜோதிடர்கள்

மே 1-ம் தேதி குரு பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் குருபெயர்ச்சி பலன்களை வைத்து தமிழா தமிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
Zee tamil Thamizha Thamizha

ஜீ தமிழ் தமிழா தமிழா நிகழ்ச்சி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான விவாத நிகழ்ச்சி தமிழா தமிழா. ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் ட்ரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் தலைப்புகளை தேர்வு செய்து விவாதங்களையே நடத்தி வருகிறது

Advertisment

அந்த வகையில், கடந்த வாரம் கணவனே கண் கண்ட தெய்வம் Vs மனைவி சொல்லே மந்திரம் என்று இருக்கும் கணவர்கள் என்ற பெயரில் விவாதம் நடைபெற்றது. மே 1-ம் தேதி குரு பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் குருபெயர்ச்சி பலன்களை வைத்து தமிழா தமிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக ப்ரமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும்? யாருக்கெல்லாம் யோகம் கிடைக்கும், பண வரவு எப்படி இருக்கும் என பல கேள்விகள் மக்களின் மனதுக்குள் ஓடி கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் பதில் கிடைக்கும் வகையில் 12 ராசிக்கான ஜீ தமிழ் பிரபலங்கள் ஒரு பக்கமும், குரு பெயர்ச்சி பலன்களை சொல்லும் ஜோதிடர்கள் ஒருப்பக்கமும் அமர்ந்து குருபெயர்ச்சி பலன்களை கூற உள்ளனர்.

ஜோதிடர்கள் இந்த 12 ராசிக்காரர்களில் யாருக்கு அதிக யோகம் என்று மதிப்பெண் போட்டு கூற உள்ளனர். ஜோதிடர்கள் கொடுத்த மதிப்பெண் அடிப்படையில் கன்னி ராசி 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளது, 96 மதிப்பெண்களுடன் விருச்சிகம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படி குருபெயர்ச்சி பலன்கள் குறித்து மேலும் பல தகவல்களை நிகழ்ச்சியில் கூற உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

New Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment