Advertisment

கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஷால்?

திரு இயக்கிவரும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தில், விஷால் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்கிறார்கள்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
vishal

திரு இயக்கிவரும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தில், விஷால் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்கிறார்கள்.

Advertisment

கார்த்திக் - கெளதம் கார்த்திக் இருவரும் அப்பா - மகனாக முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. திரு இயக்கும் இந்தப் படத்தில், ரெஜினா மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன் இருவரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்திற்கு இசையமைக்கிறார். தனஞ்ஜெயன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஏப்ரல் 27ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விஸிட் அடித்துள்ளார் விஷால். திரு இதற்கு முன்னர் இயக்கிய ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’ மற்றும் ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய மூன்று படங்களிலுமே விஷால் தான் ஹீரோவாக நடித்துள்ளார். எனவே, நட்பு அடிப்படையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றிருக்கிறார் விஷால். அத்துடன், திரு கேட்டுக் கொண்டதற்காக கெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறார் விஷால் என்கிறார்கள்.

Tamil Cinema Vishal Gautham Karthik Karthik
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment