Advertisment

கேரளாவிலும் ‘மெர்சல்’ ரிலீஸ் ஆவதில் சிக்கல்?

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் மெர்சல் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பைரவா பட பிரச்னையை சரி செய்ய சொல்வதால், படம் வெளியாவதில் சிக்கலாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mersal, Censor certificate, Chennai high court, Actor vijay,

விஜய் படத்துக்கு மட்டும் அதென்னவோ இப்படி வரிசையாக ஏகப்பட்ட சிக்கல் முளைக்கிறது. புதிது புதிதாக பிரச்னைகள் தோன்றுவதால், விஜய் ரொம்பவே சோர்ந்து போயிருக்கிறார்.

Advertisment

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் என எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசின் கேளிக்கை வரியால் திரையரங்குகளில் புதிய படங்கள் எதையும் ரிலீஸ் செய்வதில்லை என கடந்த 6ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கடந்த வாரம் ரிலீஸாக வேண்டிய 6 படங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த வார ரிலீஸிற்கு எந்தப் படமும் தயாராகவில்லை.

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பிரச்னை தீர்ந்து ‘மெர்சல்’ ரிலீஸாகுமா என்பது சந்தேகம்தான். அப்படியே ரிலீஸானாலும், தீபாவளி அன்றுதான் ரிலீஸாக வாய்ப்பு இருக்கிறது. காரணம், விழாக்காலங்களில் வழக்கமாக ஒருநாள் முன்கூட்டியே படங்கள் ரிலீஸ் செய்யப்படும். ஆனால், தீபாவளி புதன்கிழமை வருவதால், எப்போது ரிலீஸ் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ‘தீபாவளியன்றே ரிலீஸ் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டாராம் விஜய்.

தமிழ்நாட்டுக்குப் பிறகு கேரளாவில் தான் விஜய் படங்களுக்கு அதிக மவுசு இருக்கிறது. தமிழ்நாட்டு ரசிகர்களைப் போலவே கேரள ரசிகர்களும் விஜய்யை தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றனர். வேறெந்த வேற்றுமொழிப் படங்களுக்கும் இல்லாத பெருமை, கேரளாவில் ‘மெர்சல்’ படத்துக்குக் கிடைத்துள்ளது. அதாவது, 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘மெர்சல்’ வெளியாக இருக்கிறது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த ‘பாகுபலி’ படமே இங்கு 320 திரையரங்குகளில்தான் ரிலீஸானது. அஜித்தின் ‘விவேகம்’ படம் 309 திரையரங்குகளில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களையும் வாங்கி கேரளாவில் வெளியிட்ட குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம்தான், ‘மெர்சல்’ படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறது. ஆனால், ஏற்கெனவே வெளியான விஜய்யின் ‘பைரவா’ படம், கேரளாவில் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது. எனவே, அந்த நஷ்டத்தை ஈடுகட்டினால்தான் ‘மெர்சல்’ படத்தை வாங்கி ரிலீஸ் செய்வோம் என விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் குரல் எழுப்பியுள்ளார்களாம். இதனால், கேரளாவில் ‘மெர்சல்’ ரிலீஸ் ஆவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Actor Vijay Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment