Advertisment

விஜய் சேதுபதி பிறந்த நாளில் வெளியாகும் ‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘சீதக்காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விஜய் சேதுபதியின் பிறந்த நாளான ஜனவரி 16ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay sethupathi, நடிகர் விஜய் சேதுபதி

vijay sethupathi, நடிகர் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘சீதக்காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விஜய் சேதுபதியின் பிறந்த நாளான ஜனவரி 16ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

Advertisment

விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். அடுத்ததாக காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடிப்பில் ‘ஒரு பக்க கதை’ கதை இயக்கினார். இந்தப் படம் தயாராகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டாலும், இன்னும் ரிலீஸாக முடியாமல் தவிக்கிறது.

எனவே, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ‘சீதக்காதி’ என்ற படத்தை எடுத்து வருகிறார் பாலாஜி தரணீதரன். தமிழ்நாட்டில் வாழ்ந்த வள்ளல் பெயர்தான் சீதக்காதி. இந்தப் படத்தில் ‘அய்யா’ எனும் நாடக நடிகராக விஜய் சேதுபதி நடிக்கிறார். 30, 50 மற்றும் 75 வயது முதியவர் என மூன்று தோற்றத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் தோற்றத்திற்காக, புகழ்பெற்ற ஹாலிவுட் மேக்கப் மேனான க்ரெக் கெனான் பணியாற்றி வருகிறார். இவர் இதுவரை சிறந்த மேக்கப் கலைஞருக்காக மூன்று முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார். எனவே, விஜய் சேதுபதியின் தோற்றம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘சீதக்காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விஜய் சேதுபதியின் பிறந்த நாளான ஜனவரி 16ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Cinema Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment