சி.பிரேம் குமார் என்பவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ரொமான்டிக் காதல் திரைப்படம் ’96’. முதன்முதலாக விஜய்சேதுபதி – த்ரிஷா ஜோடி சேரும் இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. ‘வயசானாலும் உன் அழகு இன்னும் குறையல’ என்று சொல்லும் அளவிற்கு க்யூட்டாக பூஜையில் கலந்து கொண்டார் த்ரிஷா.

இயக்குனர் பிரேம் குமார் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் ஸ்பெஷல். பாலாஜி தரணீதரன் தற்போது இயக்கிவரும் ‘ஒரு பக்க கதை’ படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிவரும் கோவிந்த் மேனன் என்பவர் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

எல்லாம் சரி! அது ஏன் 96-னு டைட்டில் வச்சாங்கன்னு யோசிக்குறீங்களா? ஒருவேளை 1996-ல் நடந்த காதல் கதையோ!?