Advertisment

திரை விமர்சனம்: உரியடி விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ படம் எப்படி இருக்கு?

உரியடி விஜய்குமார் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் வழங்கும் "Fight Club" படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை பற்றிய முழு விமர்சனத்தை இங்கு காணலாம்.

author-image
WebDesk
New Update
Fight Club

உரியடி விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ படம் விமர்சனம்

உரியடி விஜய்குமார் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் வழங்கும் "Fight Club" படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை பற்றிய முழு விமர்சனத்தை இங்கு காணலாம்

Advertisment

கதைக்களம்:

மிகப்பெரிய குத்துச்சண்டை வீரராக ஏரியாவில் வலம் வரும் பெஞ்சமினுக்கு தன்னை சுற்றி இருக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக்க ஆசை. ஆனால், அதற்கு எதிராக சிறுவர்களுக்கு போதைப் பொருள் கொடுத்து தொழில் நடத்தி வருகிறார் கிருபாகரன். கிருபாவுடன் சேரும் ஜோசப் தனது அண்ணன் பெஞ்சமினைக் கொலை செய்கிறார். அதன் பிறகு, ஜோசப்பை ஏமாற்றி கிருபா அரசியல்வாதியாக மாறி ஏரியாவைக் கைப்பற்றுகிறார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜோசப், நாயகன் செல்வத்தைத் (விஜய்குமார்) தூண்டிவிட்டு கிருபாவை பழிவாங்கத் திட்டம் போடுகிறார். இந்த திட்டம் நிறைவேறியதா  இல்லையா? என்பதே மீதி கதை .

நடிகர்களின் நடிப்பு :

"உறியடி 2" படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார் விஜய்குமார். இளம் ஹீரோவாக விஜயகுமாரின் நடிப்பு அமர்க்களம். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். முதல் பாதியில் வரும் ஹீரோயின், அதன் பிறகு எங்கும் தென்படவில்லை. விஜய்குமாரை தவிர்த்து பெரும்பாலான கேரக்டர்கள் எல்லாமே புது முகம்தான் என்றாலும் அவர்களுடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

இயக்கம் மற்றும் இசை :

வடசென்னையை கதைக்களமாக கொண்டு இளைஞர்களின் வாழ்வில் அரசியல் என்ன செய்கிறது என்று கருத்தின் அடிப்படையில் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அப்பாஸ். எ. ரஹமத். இன்றைய கால இளைஞர்களுக்கு ஏற்றவாறு துள்ளலாக இசையமைத்து ஒவ்வொரு காட்சிகளையும் மெருகேற்றி இருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. குறிப்பாக Retro bgm பக்கா அட்டகாசம்.

படம் எப்படி ?

வெட்டு, குத்து, கொலை, சண்டை, அரசியல் என முதல் பாதி முழுவதும் ஜெட் வேகத்தில் செல்கிறது, குறிப்பாக சண்டை காட்சிகள் நம்மை பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே வரும் வசனங்களும் ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் அட்டகாசமான ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் முதல் பாதியின் தரத்தை மெர்சலாக கொடுத்து இருக்கிறது. இரண்டாம் பாதியும் இதே போல சென்றால் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, இரண்டாம் பாதியில் திரைக்கதை தடுமாற்றங்களை சந்திக்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை எளிதாக யூகிக்கக்கூடிய இரண்டாம் பாதியின் திரைக்கதை ரசிகர்களை சற்று ஏமாற்றி உள்ளது.

வடசென்னை மக்கள் என்றாலே ஒரு விதமான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய இந்த காலகட்டத்தில் அதை மேலும் உறுதிப்படுத்துவது போல கதைக்களம் அமைத்திருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

மொத்தத்தில் ஆக்சன் பட பிரியர்களுக்கு சிறந்த படமாகவும், சினிமா ரசிகர்களுக்கு சுமாரான படமாகவும்" Fight Club" முடிந்திருக்கிறது.

 - நவீன் சரவணன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment