2002ஆம் ஆண்டு ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. அவர் ஹீரோயினாகி 15 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. ஆனால், அப்போது எப்படி இருந்தாரோ, அதேபோல்தான் இன்னும் அழகுடனும், இளமையாகவும் காட்சியளிக்கிறார்.
முக்கியமாக, அவருடைய எடை. 50 கிலோவுக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் கொஞ்சம்தான் நகர்கிறதே தவிர, பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. அதுவும் தற்போது பாக்ஸிங் வேறு கற்றுக் கொள்வதால், செதுக்கிவைத்த சிலை போல இருக்கிறது அவருடைய உடலமைப்பு.
இத்தனை வருடங்கள் ஒரே மாதிரியாக இருக்க, அப்படி என்னதான் சாப்பிடுகிறார் த்ரிஷா?
அவரைப் பொறுத்தவரையில் டயட் என்று எதுவும் கிடையாது. ‘இதைத்தான் சாப்பிடுவேன், அதைத்தான் சாப்பிடுவேன்’ என்ற கட்டுப்பாடும் விதித்துக் கொள்ளாதவர். அதுவும் வீட்டில் சாப்பிட்டார் என்றால், தனக்குப் பிடித்த உணவாக இருந்தால் வயிறு நிறைய சாப்பிடுவார். பெரும்பாலும், வேகவைத்த உணவுகளைத்தான் அதிகம் எடுத்துக் கொள்கிறார். எண்ணெய் குறைவாகத்தான் பயன்படுத்துகிறார். அதுவும் ஆலிவ் ஆயில் மட்டுமே.
மறந்தும் கூட ஜிம்முக்குப் போகாமல் இருக்க மாட்டார். தினமும் ஜிம்முக்குப் போகவில்லை என்றால், அவருக்குத் தூக்கமே வராது. சென்னையில் இருந்தால், ரெகுலராகச் செல்லும் ஜிம் இருக்கிறது. அங்குதான் இப்போது பாக்ஸிங் கற்று வருகிறார். ஷூட்டிங்கிற்காக வெளியூர் சென்றால், அவர் தங்கும் ஹோட்டல்களில் உள்ள ஜிம்மைப் பயன்படுத்துகிறார்.
நீங்களும் த்ரிஷாவை ஃபாலோ பண்ணுங்க...