Advertisment

இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?

அஷ்வின் - ஸ்வாதி ஜோடி கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பது டிரைலரில் தெரிகிறது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?

அசோக் அமிர்தராஜ் என்பவர் இயக்கியிருக்கும் படம் 'திரி'. தந்தை மகன் உறவினை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தில் அஷ்வின், ஸ்வாதி ரெட்டி, கருணாகரன், ஜெயப்பிரகாஷ், ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisment

எஸ்.எஸ்.தமன் மற்றும் அஜேஷ் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். தயாரிப்பு - ஆர்.பி.பாலகோபி, ஒளிப்பதிவு - கே.ஜி.வெங்கடேஷ், படத்தொகுப்பு - ராஜா சேதுபதி எஸ்.பி.

இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. கதைக்களம் அப்பா - மகன் உறவு என்பதால் மென்மையான திரைக்கதையாக இருக்கும் என நினைத்தால், டிரைலர் வேற ரேஞ்சில் உள்ளது. ஏற்கனவே, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திலும் அஷ்வின் - ஸ்வாதி ஜோடி இணைந்து நடித்திருப்பதால், இப்படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பது டிரைலரில் தெரிகிறது.

அதேசமயம், அஷ்வின் முதன்முறையாக ஆக்ஷன் பிளாக்கில் களமிறங்கியுள்ளார். இது அவருக்கு கைக்கூடுமா, திரி பட்டையைக் கிளப்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Swathi Reddy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment