Advertisment

ரஜினிகாந்த் தோளில் சிறுமியாக... தமிழில் பிரபலமான இந்த பாடகியை கண்டுபிடிங்க!

ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் பல பிரபலங்கள் தங்கள் சிறுவயது புகைப்படங்களை தங்களது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Rajinikanth Anuradha

நடிகர் ரஜினிகாந்துடன் பிரபல பின்னணி பாடகி

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்து வரும் நிலையில், இணையதள பயன்பாடு பெருகிவிட்ட இந்த காலக்கடத்தில் பிரபலங்களின் தனிப்பட்ட தகவல்களை தேடி பார்ப்பதில் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் பல பிரபலங்கள் தங்கள் சிறுவயது புகைப்படங்களை தங்களது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

Advertisment

இதில் ஒருசிலர் சிறுவயத்தில் அப்போது உள்ள முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக ஒரு பிரபலம் எடுத்தக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் சிறுமியாக அவரை தூக்கி வைத்துள்ளார்.

அந்த பிரபலம் வேறு யாருமில்லை. பிரபல பின்னணி பாடலி அனுராதா ஸ்ரீராம் தான். தமிழ், சிங்களம், கன்னடா, இந்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், 1995-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தின் மூலம் பாடகியான தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியது. ஏ.ஆா.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில், ‘’மலரோடு மலரிங்கு, இது நம்ம பூமி உள்ளிட்ட 2 பாடல்களை பாடியிருந்தார்.

Anuradha Sreeram

தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் வித்யா சாகர், சிற்பி, தேவா, யுவன் சங்கர் ராஜா, பரத்வாஜ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள அனுராதா ஸ்ரீராம், கடைசியாக 2020-ம் ஆண்டு தமிழில் வெளியான எட்டித்திக்கும் பற என்ற படத்தில் பாடல் பாடியிருந்தார். 1999-ம் ஆண்டு சிறந்த பாடகிக்கான கர்நாகட அரசின் மாநில விருதை வென்றிருந்த அனுராதா ஸ்ரீராம், 2003-ம் ஆண்டு சர்வசதேக தமிழ் படம் விருது, உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

திரைப்படம் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் பாடல்களை பாடியுள்ள அனுராதா ஸ்ரீராம், தற்போது டிவி இசை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் சென்னை குயின் மேரி கல்லூரியில் இசையில் முதுகலை பட்டம் பெற்றுள்ள அனுராதா ஸ்ரீராம் பரசுராமன் என்ற பாடகரை திருமணம் செய்துகொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment