கர்நாடக மாநிலத்தின் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் பிரியங்கா அருள் மோகன். கடந்த 2019-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒன்த் கதே ஹீலா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
நானிஸ் கேங்லீடர் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், அடுத்து ஸ்ரீகாரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.கடந்த 2021-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
நெல்சன் இயக்கிய இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், பிரியங்காவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தது. அடுத்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், படத்தில் நடித்தார்.
தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா மோகன், தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்து இயக்குனர் ராஜேஷ் இயக்கும் படத்திலும் நடிக்க பிரியங்கா மோகன் உள்ளார்.
அதேபோல் வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ள பிரியங்கா மோகன் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.