Advertisment

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தில் ஜோதிகா : நண்பர்களுன் செம்ம எஞ்ஜாய் : வைரல் வீடியோ

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள விடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Hyothika Trip

எவரெஸ்ட் சிகரத்தில் நடிகை ஜோதிகா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகா தற்போது எவரஸ்ட் சிகரத்திற்கு சென்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் படமாக வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. நடிகை நக்மாவின் தங்கையான இவர், அடுத்து சூர்யா, விஜய், அஜித், விக்ரம், கமல்ஹாசன், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ள நிலையில், திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா, அடுத்து 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ராட்சசி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்த ஜோதிகா, தற்போது கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.

சமீபத்தில் இவர் இந்தியில் அஜய் தேவ்கனுடன் நடித்த சைத்தான் படம் வெளியானது. சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜோதிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதில் சமீப காலமாக தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்த ஜோதிகா, தற்போது தான் தனது நண்பர்களுடன் எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

எவரஸ்ட் சிகரத்தில் திரைக்கு பின்னாள் என்று இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பனிப்பொழிவை ரசித்து மகிழ்கிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jyothika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment