Advertisment

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக புது படம்... வித்தியாசமான கெட்டப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் : ஃபர்ஸ்ட் லுக் வைரல்

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2010-ம் ஆண்டு தமிழில் வெளியான நீதானா அவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

author-image
WebDesk
New Update
Aishwarya Rajesh New kannada

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தி திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், தற்போது முதல்முறையாக கன்னடத்தில் அறிமுகமாக உள்ளார். தனது முதல் கன்னட படத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.

Advertisment

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2010-ம் ஆண்டு தமிழில் வெளியான நீதானா அவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து உயர்திரு 420 உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவருக்கு திருப்புமுணை ஏற்படுத்திய திரைப்படம், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படம் தான்.

அதன்பிறகு ரம்மி, பன்னையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை வென்றிருந்தார். 2023ல் தமிழில் ஐந்து படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டியர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் "கருப்பர் நகர்", "மோகன் தாஸ்" மற்றும் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வரும் நிலையில், தற்போது  கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். உத்தரகாண்டா என்று பெயரிப்பட்டுள்ள இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் ஃபர்ஸ்லுக் போஸ்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் குடை பிடித்துக்கொண்டு கம்பீரமாக நிற்கிறார்.

தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனது முதல் கன்னட படத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: சமீப காலமாக, நயன்தாரா பாணியில் பெண்களைக் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aishwarya Rajesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment