Advertisment

நோ மேக்கப்... பரட்டை தலை... 7 வருஷத்துக்கு முன்... சுஜா வருணி ஓல்டு க்ளிக்ஸ்

பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சுஜா வருணி தற்போது முக்கிய கேரக்டர்களில் மட்டும் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Suja Varunee

சுஜா வருணி

நடிகர் திகம் சிவாஜி குடும்பத்து மருமகளும், நடிகையுமான சுஜா வருணி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Suja Varunee (5)

நடிகை சுஜா வருணி

தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சுஜா வருணி. இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் அதன்பிறகு கஸ்தூரி மான், உள்ள கடத்தல் என ஒரு சில படங்களில் நடித்திருந்தார். பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சுஜா வருணி தற்போது முக்கிய கேரக்டர்களில் மட்டும் நடித்து வருகிறார்.

publive-image

படங்களில் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் சுஜா வருணிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தமிழில் பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த சுஜா வருணி கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான த்ரிஷயம் 2 படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சுஜா வருணி நடித்து வருகிறார்.

publive-image

இதனால் தமிழில் பெரிதாக வாய்ப்பு இல்லாத சுஜா வருணி விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 91 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குபிடித்து விளையாடியிருந்தார். அதன்பிறகு எலிமினேட் ஆன சுஜா வருணிக்கு பட வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. கடைசியாக தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான சத்ரு என்ற படத்தில் நடித்திருந்தார்.

publive-image

படவாய்ப்பு இல்லை என்றாலும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சுஜா வருணி சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது தனது குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியே பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதில் பல பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனா. அந்த வகையில் சுஜா வருணி தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

publive-image

7 வருடங்களுக்கு முன்பு (கடந்த 2016) எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு அதே நாள் 2016-ல் எப்படி இருக்கிறேன். மேக்கப் ல்லாமல் பரட்டை முடியுடன் என்று பதிவிட்டுள்ளார். சுஜாவின் இந்த த்ரோ பேக் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suja Varunee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment