Advertisment

இலங்கையில் மேக்கப் செமினார்... சாப்பாட்டால் அசிங்கப்பட்டேன் : சீரியல் நடிகை வேதனை

2000-ம் ஆண்டு தமிழில் வெளியான பெண்கள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சந்தோஷி.

author-image
WebDesk
New Update
Actress Santhoshi

நடிகை சந்தோஷி

மேக்கப் செமினாருக்காக இலங்கை சென்றிருந்த நடிகை சந்தோஷி சாப்பாடு காரணமாக தான் அவமானப்படுத்தப்பட்டதாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

2000-ம் ஆண்டு தமிழில் வெளியான பெண்கள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சந்தோஷி. தொடர்ந்து ரஜினியுடன் பாபா படத்தில் நடித்த இவர், மாறன், மிலிட்டரி, பாலா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல், ருத்ரவீனை, இளவரசி, மரகதவீணை உள்ளிட்ட பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகியுள்ள அவர், தற்போது மேக்கப், பேஷன் என புதிய விஷயங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். மேக்கப் மற்றும் பேஷன் டிசைன்கள் காரணமாக உள்நாட்டில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பிபரலமான சந்தோஷி, அங்கு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.

இந்த வகையில் சமீபத்தில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற மேக்கப் செமினார் நிகழ்ச்சியில் சந்தோஷி பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இதில் சாப்பாடு விஷயத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மக்களை கட்டப்படுத்த முடியாமல் திணறியுள்ளனர். இதில், நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் சந்தோஷி உட்பட சிலரை அசைவ உணவு ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அசைவ உணவு பிடிக்காதவதான சந்தோஷி இது குறித்து அவர்களிடம் கூறியதை தொடர்ந்து அவருக்கு ஜூஸ் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சாப்பாடு பொட்டலங்கள் கொடுக்கப்பட்டதாகவும், அதையும் சரியான நேரத்தில் கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதற்கு முன் தன்னுடைய வகுப்பில் பயின்றவர்கள் இந்த மாதிரி ஒரு கஷ்டத்தை அனுபவித்த இல்லை என்றும், நிகழச்சி ஏற்பாட்டாளர்களால் தனது அசிங்கம் தான் ஏற்பட்டது என்றும் சரியாக விளம்பரம் செய்யாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தோஷி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது அதிருப்தியை நிகழ்ச்சி மேடையிலேயே தெரிவித்த சந்தோஷியின் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment