Advertisment

சூர்யாவின் "நானே தானா வீணா போனா" பாடல்: ட்விட்டரில் ட்ரெண்டிங்!

இப்படத்தின் "நானே தானா வீணா போனா" எனும் பாடலை இசையமைப்பாளர் அனிருத் இன்று வெளியிட்டுள்ளார்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
சூர்யாவின் "நானே தானா வீணா போனா" பாடல்: ட்விட்டரில் ட்ரெண்டிங்!

சூர்யாவின் 42-வது பிறந்தநாள் கடந்த ஞாயிறு அன்று (ஜூலை 23) விமரிசையாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக, 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அன்று வெளியிட்டது படக்குழு. சூர்யாவின் பிறந்தநாள் முதல், அப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisment

தற்போது சென்னையில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதோடு மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் சூர்யா சி.பி.ஐ. அதிகாரியாக நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு செந்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், இப்படத்தின் "நானே தானா வீணா போனா" எனும் பாடலை இசையமைப்பாளர் அனிருத் இன்று வெளியிட்டுள்ளார். இப்போதே இந்தப் பாடல் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங் ஆக ஆரம்பித்துவிட்டது. மாலை ஆறு மணிக்கு மேல் யூடியூபில் அதிகாரப்பூர்வமாக இப்பாடல் பதிவேற்றம் செய்யப்படும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/bygzm6sj_oE

Vignesh Sivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment