Advertisment

ஓவியா படத்திற்கு இசையமைக்கிறார் சிம்பு

ஓவியா நடிக்கும் ஹீரோயினை மையப்படுத்திய படத்துக்கு, சிம்பு இசையமைக்க இருக்கிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
oviya simbu

ஓவியா நடிக்கும் ஹீரோயினை மையப்படுத்திய படத்துக்கு, சிம்பு இசையமைக்க இருக்கிறார்.

Advertisment

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் தியேட்டர் அதிபரின் மகள் அனிதா. இவர் இயக்கும் படத்தில், ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோ இல்லாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படம் இது. பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.

இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைக்கிறார். சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ படத்தைத் தொடர்ந்து சிம்பு இசையமைக்கும் இரண்டாவது படம் இது. சிம்பு இசையில் ஏற்கெனவே ஒரு பாடலைப் பாடியுள்ளார் ஓவியா. அந்த நட்பு அடிப்படையில் ஓவியா படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டாராம் சிம்பு.

ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 3’, சற்குணம் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘கே 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Tamil Cinema Oviya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment