Advertisment

இளம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பது உண்மை; நடிகைகள் கூட்டமைப்பு பகிரங்க அறிவிப்பு!

ஆதிக்கம் படைத்தவர்களின் அதிகார துஷ்பிரயோகமானது, மலையாள சினிமாவிலும் உள்ளது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இளம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பது உண்மை; நடிகைகள் கூட்டமைப்பு பகிரங்க அறிவிப்பு!

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கேரள நடிகர் சங்கத்திற்கும்(அம்மா), கேரள நடிகைகள் கூட்டமைப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் நடைபெற்ற கேரள நடிகர் சங்கத்தின் 23-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சங்கத்தின் தலைவர் இன்னசென்ட், "மலையாள சினிமா உலகம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாவும், நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதில்லை" என்றும் கூறி இருந்தார்.

இந்த விளக்கத்தை கேரள நடிகைகள் கூட்டமைப்பில் உள்ள நடிகைகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னசென்ட் அளித்த விளக்கத்திற்கு பதில் அளிக்கும் விதத்தில், நடிகைகள் கூட்டமைப்பு சார்பில் ஃபேஸ்புக்கில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதில், "நடிகர் சங்கத் தலைவர் இன்னசென்ட் முற்றிலும் தவறான தகவலை தெரிவித்து உள்ளார். ஆதிக்கம் படைத்தவர்களின் அதிகார துஷ்பிரயோகமானது, மலையாள சினிமாவிலும் உள்ளது. இளம் நடிகைகளும், வாய்ப்புத் தேடி வரும் பல புது முகங்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதை மறுக்க முடியாது.

கண்களை மூடிக் கொண்டால், உலகமே இருண்டு விடும் என்றும், கேரள சினிமா துறையில் ஒன்றுமே நடைபெறவில்லை என்று கூறும் இன்னசென்ட்டின் பொய்யான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளனர்.

கேரள நடிகைகள் கூட்டமைப்பின் இந்த கருத்தால், கேரள சினிமா துறையில் நடிகர்கள் சங்கத்திற்கும், நடிகைகள் கூட்டமைப்பிற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

Bhavana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment