இயக்குநர்கள் ராம், மிஷ்கின் நடித்துள்ள ‘சவரக்கத்தி’ : பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ்

இயக்குநர்கள் ராம் மற்றும் மிஷ்கின் நடித்துள்ள ‘சவரக்கத்தி’ படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இயக்குநர்கள் ராம் மற்றும் மிஷ்கின் நடித்துள்ள ‘சவரக்கத்தி’ படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

மிஷ்கினின் சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சவரக்கத்தி’. டார்க் காமெடிப் படமான இதில், இயக்குநர் ராம் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். பிரியாமணி உள்பட 6 ஹீரோயின்கள் தேர்வுசெய்யப்பட்டு, அதன்பிறகு பூர்ணா கமிட்டானார். காது கேளாத மாற்றுத்திறனாளி கர்ப்பிணியாக அவர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பதோடு, முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார் மிஷ்கின். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தையும் அவர்தான் தயாரித்துள்ளார். ‘பிசாசு’ படத்துக்கு இசையமைத்த அரோல் கரோலி, இந்தப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.

2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சவரக்கத்தி’ படத்தின் டீஸர் 2016ஆம் ஆண்டு ரிலீஸானது. ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே வந்த நிலையில், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள ‘கரு’, பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’, கலீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘கீ’ ஆகிய படங்களும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகின்றன.

×Close
×Close