Advertisment

தனுஷ் படத்தைத் தயாரிக்கும் விஜய் சேதுபதி தயாரிப்பாளர்

விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்த், தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhanush, d44, sun pictures

விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்த், தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார்.

Advertisment

‘இறைவி’ படத்துக்குப் பிறகு தனுஷ் கால்ஷீட் தருவதாகக் கூறியதால், ஒரு வருடம் வேறெந்தப் படத்தையும் இயக்காமல் இருந்தார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால், ஒரு வருடத்துக்கு மேலாகியும் தனுஷ் கால்ஷீட் தராததால் கடுப்பான கார்த்திக் சுப்பராஜ், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ‘மெர்குரி’ என்ற படத்தை இயக்கிவிட்டார். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் இணைவது உறுதியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் லண்டனில் நடைபெற இருக்கிறது. இந்தப் படத்தை, விஜய் சேதுபதி, மாதவன் நடித்த ‘விக்ரம் வேதா’ படத்தின் தயாரிப்பாளரான சஷிகாந்த், தன்னுடைய ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடித்து வருகிறார். அத்துடன், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘வடசென்னை’ படங்களில் ஃபைனல் ஷெட்யூல் பாக்கி இருக்கிறது. ஆனாலும், தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது என்கிறார்கள்.

Tamil Cinema Dhanush Karthik Subbaraj Producer Sashikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment