Advertisment

சமந்தாவின் லேட்டஸ்ட் பாய் ஃபிரண்ட் இவர்தான்...

சமந்தா நடித்துவரும் ‘யு டர்ன்’ தமிழ் ரீமேக்கில், அவருடைய பாய் ஃபிரண்டாக பின்னணிப் பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
samantha to quit acting

samantha

சமந்தா நடித்துவரும் ‘யு டர்ன்’ தமிழ் ரீமேக்கில், அவருடைய பாய் ஃபிரண்டாக பின்னணிப் பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.

Advertisment

பவன் குமார் இயக்கி, தயாரித்த படம் ‘யு டர்ன்’. கன்னடப் படமான இது, 2016ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி ரிலீஸானது. பெண்ணை மையப்படுத்திய இந்தப் படத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘த இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழில் பயிற்சி நிருபராகப் பணியாற்றும் வேடத்தில் ஷ்ரத்தா நடித்திருந்தார்.

‘யு டர்ன்’ படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. எனவே, அதை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்ய பலரும் போட்டி போட்டனர். ஆனால், பவன் குமாரே தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார். ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை புறநகரில் தொடங்கியுள்ளது. கன்னடப் படத்தில், ஒரு மேம்பாலம் முக்கிய இடம் வகிக்கும். அதேபோல் இங்கும் ஒரு மேம்பாலத்தில் படமாக்கி வருகின்றனர்.

இந்தப் படத்தில், சமந்தாவின் பாய் பிரண்டாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். ‘மாஸ்கோவின் காவிரி’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கணவர் இவர்.

Tamil Cinema Pawan Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment