Advertisment

சாலார் பாக்ஸ் ஆபிஸ் 3வது நாள் வசூல்: உலக அளவில் ரூ. 402 கோடி வசூலித்து ஜவான் சாதனையை முறியடித்த சலார்

பிரபாஸ் நடித்துள்ள சாலார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் 3வது நாள் வசூலில் உலக அளவில் மொத்தம் ரூ. 402 கோடி வசூலித்து ஜவான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து 2023-ம் ஆண்டில் முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Salaar 1

சாலார் பாக்ஸ் ஆபிஸ் 3வது நாள் வசூல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Prabhas Movie Salaar, Day 3 Box Office Collection: பிரபாஸ் நடித்துள்ள சாலார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் 3வது நாள் வசூலில் உலக அளவில் மொத்தம் ரூ. 402 கோடி வசூலித்து ஜவான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து 2023-ம் ஆண்டில் முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Salaar Box Office Collection, Day 3: Prabhas’ film earns Rs 402 cr global gross, demolishes Jawan record to emerge as highest first weekend earner of 2023

பிரபாஸின் சலார் படம் காம்ஸ்கோர் குளோபல் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஷாருக்கானின் டன்கி படம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பிரபாஸ் நடித்துள்ள சலார் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உலக அளவில் ஷாருக்கானின் டன்கி படத்தை தாண்டியுள்ளது.

பிரபாஸ் நடித்துள்ள சாலார் பகுதி 1 படம் வெள்ளிக்கிழமை பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளது. ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை தாண்டி 2023-ம் ஆண்டின் மிகப்பெரிய தொடக்கப் படமாக இடம்பிடித்துள்ளது. சலார் படம் சனிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவு இருந்தபோதிலும், படம் மீண்டும் வேகம் எடுத்தது. ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவில் ரூ.64.07 கோடியை வசூலித்தது. இதன் மூலம், இந்தியாவில் மொத்தம் ரூ. 211.12 கோடியை வசூலித்துள்ளது.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சலார் படம் 3-வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் வார இறுதியில் வலுவான நிலையில் உள்ளது. பிரபாஸ்-நடித்த சலார் படம் வெள்ளிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ, 90.7 கோடியுடன் தொடங்கியது. ஷாருக்கானின் ஜவான், அதன் முதல் நாளில் ரூ. 89.5 கோடி வசூலித்தது. இருப்பினும், சலார் படம் சனிக்கிழமை 37 சதவீதம் சரிவைச் சந்தித்து ரூ.56.35 கோடியை வசூலித்தது. அதிர்ஷ்டவசமாக, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் 13 சதவீதம் அதிகரித்து ரூ.64.07 கோடியை எட்டியது. அனைத்து மொழிகளிலும் சலார் படம் ரூ. 209.1 கோடி வசூல் செய்துள்ளது.

தயாரிப்பாளர்கள் கருத்துப்படி, சலார் படத்தின் உலகளாவிய மொத்த வசூல் 402 கோடி ரூபாய் ஆகும். சலார் படத் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் குறிப்பிட்டுளபடி, மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்குப் பிறகு, ஷாருக்கான் நடித்த ஜான் திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 384.69 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில், பிரசாந்த் நீல் இயக்கிய சலார் படம் ஷாருக்கானின் ஜவான் சாதனையை முறியடித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், சலார் படம் காம்ஸ்கோர் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஜேசன் மோமோவாவின் அக்வா மேன் மற்றும் தி லாஸ்ட் கிங் மற்றும் திமோதி சாலமெட்டின் வோன்கா ஆகியோர் பின்தங்கினர். ஷாருக்கானின் ஜவான் படமும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா எக்ஸ் பக்கத்தில், செய்தியைப் பகிர்ந்துள்ளார். சலார் மற்றும் டன்கி இரண்டு படங்களும் உலக அளவில் கிறிஸ்துமஸ் வார இறுதியில் டாப் 10-ல் இடம்பிடித்ததாகக் குறிப்பிட்டார். ரமேஷ் பாலா எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தயாரிப்பு நிறுவனத்தின் மதிப்பீடுகளை எதிர்பார்க்கிறோம்.. #Salaar சலார் படம் 3 நாட்கள் உலக அளவில் மொத்த – ரூ. 375 கோடியும், டன்கி படம் 4 நாட்களில் உலக அளவில் மொத்தம் - ரூ. 215 கோடியும் வசூல் செய்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார். 

பிரபாஸ் நடித்துள்ள சலார் படம், ஒரு நாள் முன்னதாக வெளியான ஷாருக்கானின் டன்கி படத்துக்கு கடுமையாகப் போட்டியை அளித்துள்ளது. டன்கி படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 31.50 கோடியை ஈட்டியது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் ரூ.106.43 கோடியை வசூலித்தது.

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், சலார் படத்தில் பிரபாஸ் உடன் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், சலார்: பகுதி 1 - போர்நிறுத்தம் மற்றும் சௌரியங்க பர்வம் என இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Salaar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment