Advertisment

ஜப்பான் பப்பில் நண்பர்களுடன் ஜாலி நடனம் : நடிகை சாய் பல்லவி வீடியோ வைரல்

ஜப்பானில் உள்ள ஒரு பப்பில் கங்கனா ரனாவத்தின் குயின் படத்தில் இடம்பெற்ற "லண்டன் துமக்டா" பாடலுக்கு சாய் பல்லவி நடனம் ஆடுகிறார்.

author-image
WebDesk
New Update
Sai Pallavi

நடிகை சாய் பல்லவி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக அமீர்கான் மகன் ஜூனைத்கான் நடிக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி பார்ட்டி ஒன்றில் நடமாடும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழில் கஸ்தூரிமான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்த சாய் பல்லவிக்கு 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாளப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் அவர் நடித்த மலர் கேரக்டர் தமிழகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகையாக மட்டுமல்லாமல் இந்த படத்தில் ஒரு நடன இயக்குனராகவும் சாய் பல்லவி பணியாற்றி இருந்தார்.

நடனத்தில் அதீத ஈடுபாடு கொண்ட சாய் பல்லவி, நடன தளத்தை எப்படி சிறப்பாக கையாள வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர். மேலும் ஆன் ஸ்கிரீன் மற்றும் ஆஃப் ஸ்கிரீனில் அவரது அவரது நடனத்திறன் வித்தியமாக இருக்கும். நடனத்தில் அவர் முறையாக பயிற்சி பெறவில்லை என்றாலும் கூட, ஒரு கைதேர்ந்த நடன கலைஞர் போல அசத்தக்கூடியவர். தனது தாயை தனது நடன குருவாகக் கருதுவதாக முன்பு கூறியிருந்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் தோன்றிய சாய் பல்லவி, 2009-ம் ஆண்டு தெலுங்கில் இ.டிவியின் அன்லிமிட்டெட் டான்ஸ் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பெற்றார். அந்த வகையில் தற்போது சாய் பல்லவி தனது சகாக்களுடன், அடுத்து வெளியாக இருக்கும் ஏக் தின் திரைப்படத்தின் ரேப்-அப் பார்ட்டியில் இரவு நடனமாடம் வீடியோ காட்சி இப்போது, ரெடிட்டில் வெளியாகியுள்ளது.

Sai Pallavi dances at the "EK Din" wrap up party in Japan

by u/isabellapintoisback in BollyBlindsNGossip

ஜப்பானில் உள்ள ஒரு பப்பில் கங்கனா ரனாவத்தின் குயின் படத்தில் இடம்பெற்ற "லண்டன் துமக்டா" பாடலுக்கு நடனமாடுகிறார். அமீர்கான் மகன் நடிக்கும் படத்தின் மூலம் சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமானார், மேலும் இதில் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜப்பானை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 1ஆம் தேதி துவங்கியதாக தகவல் வெளியானது.

ஜூனைத் கான், அமீர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் 50 நாட்கள் அட்டவணையை முடித்துவிட்டு ஜப்பானில் இருந்து திரும்பியுள்ளார். ஜப்பானின் சப்போரோவில் ஒன்றரை மாதம் படப்பிடிப்பு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sai Pallavi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment