Advertisment

ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் என்ன பாட்டு பாடப்போகிறார் ரஜினிகாந்த்?

‘கோச்சடையான்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ பாடலில் ரஜினியின் குரலைப் பயன்படுத்தியிருப்பார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் என்ன பாட்டு பாடப்போகிறார் ரஜினிகாந்த்?

Rajinikanth, Soundarya, AR Rahman, Vairamuthu

டெல்லியில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசை நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து ஒரு பாடலைப் பாட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’, ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘சர்வம் தாளமயம்’ உள்ளிட்ட தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்திப் படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியா இருக்கிறார் ஏ.ஆ.ரஹ்மான். ஆனாலும், ஆங்காங்கே இசை நிகழ்ச்சி நடத்தி தன் ரசிகர்களை மகிழ்விக்கவும் தவறுவதில்லை.

சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்திய ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தி வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள கச்சிபோலி ஸ்டேடியத்தில் ‘என்கோர்’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். 3 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, எம் டி.வி.யுடன் இணைந்து வழங்கினார்.

அதைத் தொடர்ந்து வருகிற 23ஆம் தேதி டெல்லியில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். சினிமாவில் இசையமைப்பாளராகி 25 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இந்த இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில், பிரபல பின்னணிப் பாடகர்கள் மட்டுமின்றி, ரஜினியும் கலந்து கொள்கிறார்.

ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து ஒரு பாடலைப் பாட இருக்கின்றனர். ‘கோச்சடையான்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ பாடலில் ரஜினியின் குரலைப் பயன்படுத்தியிருப்பார். இப்போது அதே பாடலைத்தான் பாடப் போகிறார்களா அல்லது வேறு ஏதாவது பாடலா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment