Advertisment

அஜித்தைத் தொடர்ந்து கமல்ஹாசன்? அசத்தும் நயன்தாரா

அஜித்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் நயன்தாரா என்கிறார்கள்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
nayanthara interview

அஜித்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் நயன்தாரா என்கிறார்கள்.

Advertisment

சினிமாவில் நடிக்கவந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்றைக்கு நம்பர் 1 நடிகையாக இருக்கிறார் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா. கமர்சியல் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அதே நேரத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

நயன்தாரா நடிப்பில் தற்போது ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. அத்துடன், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்திலும், ‘லட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்களை இயக்கிய கே.எம்.சர்ஜுன் இயக்கத்திலும் நடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நயன்தாரா நடிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்ட நயன்தாரா, கமல்ஹாசனுடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை. ‘இந்தியன் 2’ மூலம் அது நிகழ்ந்துவிடும் என்கிறார்கள்.

Tamil Cinema Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment