Advertisment

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்

‘டெவில்ஸ் நைட் : டான் ஆஃப் த் நைன் ரூஜ்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்

‘டெவில்ஸ் நைட் : டான் ஆஃப் த் நைன் ரூஜ்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.

Advertisment

வில்லனாக நடிக்கத் தொடங்கி, ஹீரோவாகவும் பல படங்களில் நடித்தவர் நெப்போலியன். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். குணசித்ர வேடங்களில் நடித்த நெப்போலியன் பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அரசின் சமூக நீதித்துறை இணை அமைச்சராகவும் இருந்தவர். தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட நெப்போலியன், அவ்வப்போது தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

அமெரிக்காவில் தொழிலதிபராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டெல் கணேசன், கைபா ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் ‘டெவில்ஸ் நைட் : டான் ஆஃப் த் நைன் ரூஜ்’. இந்தப் படத்தை, எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சாம் லோகன் கலேகி இயக்குகிறார்.

இந்தப் படத்தில், அருங்காட்சியகப் பொறுப்பாளர் என்ற முக்கிய வேடத்தில் நெப்போலியன் நடிக்கிறார். ஜெஸி டீன், ஜெஸி ஜென்சன், பாபி லேனென், ஜான் சி பார்மன், நாதன் மார்தேஸ், ஸ்விப்ட்டி மக்வே ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளரான தேவன் ஏகாம்பரமும் இந்தப் படத்தில் நடிக்கிறார். குற்றப் பின்னணி கொண்ட அமானுஷ்ய திரைப்படமாக இது உருவாகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment