ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடித்த படம் ‘மாம்’. நவாஸுதீன் சித்திக், அக்ஷய் கண்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. தமிழில் ‘அம்மா’ என்ற பெயரில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம், 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. மாஸ்கோவில், இதன் ப்ரீமியர் ஷோ சமீபத்தில் நடைபெற்றது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.