Advertisment

மகன் நடித்த படத்தை மனைவியோடு ரசித்துப் பார்த்த மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ படத்தைப் பார்த்து ரசித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
மகன் நடித்த படத்தை மனைவியோடு ரசித்துப் பார்த்த மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ படத்தைப் பார்த்து ரசித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

Advertisment

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இப்படை வெல்லும்’. கெளரவ் நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ராதிகா சரத்குமார், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வருகிற வெள்ளிக்கிழமை ‘இப்படை வெல்லும்’ படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தை, நேற்று லீ மேஜிக் ப்ரீவியூ தியேட்டரில் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் படம் பார்த்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். முன்னதாக தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார்.

படத்தைப் பார்த்த ஸ்டாலின் என்ன சொன்னார்? ‘ஐ தமிழ்’க்காக இயக்குநர் கெளரவ்விடம் பேசினோம். “படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர், ‘இப்படை வென்றே தீரும்’ என்று முதன்முதலில் சொன்னார். அதைக் கேட்டதும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

‘என் மகன் நடித்துள்ளான் என்பதற்காக இப்படிச் சொல்லவில்லை. கடந்த சில வருடங்களாக நான் பார்த்த படங்களிலேயே மிகச்சிறப்பான படமாக இது இருந்தது. வயிறு வலிக்க சிரிக்க வைத்தது மட்டுமின்றி, ஸீட் நுனியில் அமர்ந்து பார்க்க வைத்ததும் இந்தப் படம்தான்’ என்று தளபதி சொன்னார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சில இடங்களில் தன்னை மறந்து கைதட்டி ரசித்தார்” என்றார் இயக்குநர்.

தன் மகன் நடிப்பைப் பற்றி துர்கா ஸ்டாலின் என்ன சொன்னார்? “உதய்க்கு பேர் சொல்லும் படமாக இந்தப் படம் இருக்கும்” என்று சொல்லியிருக்கிறார் துர்கா ஸ்டாலின். இயக்குந கெளரவுடன், உதயநிதி ஸ்டாலின், சூரி ஆகியோர் உடனிருந்தனர்.

Tamil Cinema Mk Stalin Udhayanidhi Stalin Gaurav Narayanan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment