Advertisment

பாரதியார் கெட்டப்பில் கமல்ஹாசன் : வைரலாகும் புகைப்படம்

பாரதியார் கெட்டப்பில் முண்டாசு கட்டி, அச்சு அசல் பாரதியாரைப் போலவே இந்தப் புகைப்படத்தில் உள்ளார் கமல்ஹாசன்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal haasan new profile pic

பாரதியார் கெட்டப்பில் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கமல்ஹாசன், ட்விட்டரில் மிக ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். அரசியலில் இறங்கப்போவதாக அவர் சொன்னதில் இருந்து, இந்தியா முழுவதுமுள்ளவர்களால் கூர்மையாக கவனிக்கப்படுகிறார். சினிமாக்காரர்கள், வழக்கமாகவே தங்களுடைய படம் பற்றிய அறிவிப்புகளை, கருத்துகளை ட்விட்டரில்தான் கூறி வருகின்றனர்.

கமல்ஹாசனும் அதற்கு விதிவிலக்கல்ல. ட்விட்டரில் மட்டுமே அரசியல் பேசிவந்த கமல், ‘பிக் பாஸ்’ மேடையில் பேசத் தொடங்கி, இன்று பொதுவெளியிலும் பேசும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். தினமும் ஏதாவது ஒரு கருத்தைக் கூறி, அதுபற்றிய விவாதத்தைத் தொடங்கி வைத்துவிடுவார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் பதிவிடும் ட்வீட்டுகள், பல நேரங்களில் சரியாகப் புரியாமலேயே இருக்கும். நேற்று கூட கமல்ஹாசனின் ட்வீட்டுக்கு கோனார் உரை வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ட்விட்டரில் தன்னுடைய புரொஃபைல் படத்தை மாற்றியுள்ளார் கமல்ஹாசன். பாரதியார் கெட்டப்பில் முண்டாசு கட்டி, அச்சு அசல் பாரதியாரைப் போலவே இந்தப் புகைப்படத்தில் உள்ளார் கமல்ஹாசன். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment