Advertisment

அக்‌ஷய் குமார் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஜெயம் ரவி?

அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘பேபி’ ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜெயம் ரவி நடிப்பதாக வெளியான தகவல் பொய் எனத் தெரியவந்துள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jayam-Ravi

அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘பேபி’ ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜெயம் ரவி நடிப்பதாக வெளியான தகவல் பொய் எனத் தெரியவந்துள்ளது.

Advertisment

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தின் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடிக்க, ஜெயம் ரவியின் மகன் ஆரவ், வின்செண்ட் அசோகன், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் ‘அடங்க மறு’ படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இது அவருக்கு 24வது படம். ஜெயம் ரவியின் 25வது படத்தை, அவருடைய அண்ணன் மோகன் ராஜா இயக்க இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ‘மனிதன்’ படத்தை இயக்கிய அஹமது இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜெயம் ரவி. இந்தப் படம், அக்‌ஷய் குமார் நடிப்பில் 2015ஆம் ஆண்டு ரிலீஸான ‘பேபி’ படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ள அஹமது, தானே சொந்தமாகக் கதை எழுதி வருவதாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தீவிரவாதிகளை அண்டர்கவர் ஆபரேஷன் மூலம் அழிப்பதுதான் ‘பேபி’ படத்தின் கதை.

Tamil Cinema Akshay Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment