கெளரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘இப்படை வெல்லும்’. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சூரி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘கத்தி’, ‘2.0’ ஆகிய படங்களைத் தொடர்ந்து லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைக்க, ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்ஷன் காமெடிப் படமாக இது உருவாகி இருக்கிறது.