Advertisment

ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜிப்ஸி’ : பட பூஜை புகைப்படங்கள்

‘ஜிப்ஸி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
gypsy movie

தினேஷ், மாளவிகா நாயர் நடித்த ‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பத்திரிகையாளர் ராஜுமுருகன். அதன்பிறகு ‘ஜோக்கர்’ படத்தை இயக்கினார். சமூகக் கருத்துள்ள, மக்களுக்குப் பயன்படும் வகையில் தன்னுடைய படங்களை இயக்கும் ராஜுமுருகன், தன்னுடைய மூன்றாவது படத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

‘ஜிப்ஸி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். ஜீவா நடிப்பில் ‘கீ’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் ஜீவா.

ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மே மாதம் முதல் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

Tamil Cinema Jiiva Raju Murugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment