Advertisment

பாம்பு டான்ஸ் ஆடும் மதுமிதா... சபரி ரியாக்ஷன் : எதிர்நீச்சல் சக்தி - ஜனனி அலப்பறை

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற மெயின் கேரக்டரில் மதுமிதா நடித்து வரும் நிலையில், அவரது கணவர் சக்தி கேரக்டரில், சபரி பிரஷாந்த் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Ethir Neechal

எதிர்நீச்சல் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எதிர்நீச்சல் சீரியலில், ஜனனி கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா, அந்த தொடரின் நாயகன் சக்தியுடன் இணைந்து பாம்பு நடனமாடும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில், அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட சீரியல் எதிர்நீச்சல். பெண்கள் அடிமைத்தனம், ஆணாதிக்கம் என பல சமூக பிரச்சனைகள் குறித்து பேசும் இந்த சீரியல் ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஜனனி என்ற மெயின் கேரக்டரில் மதுமிதா நடித்து வரும் நிலையில், அவரது கணவர் சக்தி கேரக்டரில், சபரி பிரஷாந்த் நடித்து வருகிறார்.

ஜனனி - சக்தி ஜோடிக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இவர்களுக்கு இடையிலான காதல் காட்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதில் ஜனனி கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா சிறந்த சின்னத்திரை நடிகைகான விருதையும் வென்றிருந்தார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மதுமிதா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

மேலும் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ பதிவுகளை வெளியிடும் மதுமிதா தற்போது வித்தியாசமான வீடியொ ஒன்றை வெளியிட்டுள்ளார். சினேக் டான்ஸ் என்று பதிவிட்டுள்ள இந்த வீடியோ பதிவில், பாம்பு மாதிரி வரணும் என்று சக்தி சொல்ல, மதுமிதா பாம்பு போலவே கையை வைத்து நடனமாடிக்கொண்டே வருகிறார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ethirneechal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment