Advertisment

“படம் சுமாரா இருந்தா கிண்டல் பண்ணாதீங்க” - ரஜினிகாந்த் வேண்டுகோள்

‘படம் சுமாரா இருந்தா சோஷியல் மீடியாவில் கிண்டல் பண்ணாதீங்க’ என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Politics, Tamil Nadu Assembly By-Election, 20 Legislative Constituencies By-Election, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மக்கள் மன்றம், ரஜினிகாந்த் அரசியல்

Rajinikanth Politics, Tamil Nadu Assembly By-Election, 20 Legislative Constituencies By-Election, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மக்கள் மன்றம், ரஜினிகாந்த் அரசியல்

‘படம் சுமாரா இருந்தா சோஷியல் மீடியாவில் கிண்டல் பண்ணாதீங்க’ என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் நேற்று நடைபெற்றது. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன் ஹீரோயினாகவும், அக்‌ஷய் குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள, இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

‘2.0’ இசை வெளியீட்டு விழாவை, மிகப் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறது லைகா நிறுவனம். நேற்று முன்தினம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு படக்குழுவினர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது, ஹெலிகாப்டரில் இருந்து ‘2.0’ போஸ்டருடன் மூன்று பேர் கீழே குதித்தது என காசை வாரி இறைத்திருக்கிறது லைகா நிறுவனம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘இந்திரலோகத்து சுந்தரியே’ மற்றும் ‘ராஜாளி’ பாடல்கள் விழாவில் இசைக்கப்பட்டன. ‘இந்திரலோகத்து சுந்தரியே’ பாடலை சித்ஸ்ரீராம் மற்றும் சாஷா திருப்பதி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ‘ராஜாளி’ பாடலை ப்ளாஸி, அர்ஜுன் சாண்டி மற்றும் சித்ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளார். அத்துடன், சிம்பொனி கலைஞர்களுடன் சேர்ந்து கச்சேரியும் நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த விழாவில் பேசிய ரஜினி, “நமஸ்காரம்... நமஸ்தே... அஸ்லாமு அலைக்கும். இந்த 40 வருஷ சினிமா வாழ்க்கை எப்படி ஓடுச்சினே தெரியலை. இப்பத்தான் நாலைஞ்சி வருஷம் ஆன மாதிரி இருக்கு. எல்லாமே ஆண்டவனோட அருளும், மக்களோட அன்பும்தான் காரணம்.

பணம், பேர், புகழ் எல்லாமே மத்தவங்க பார்க்குறதுக்குத்தான் நல்லாருக்கும். ஒரு அளவுக்குத்தான் அவை சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆண்டவன் மேல நம்பிக்கை இருக்குறதால, ரஜினிகாந்தா இருப்பது எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது. இல்லாம இருந்திருந்தா ரொம்ப கஷ்டத்தைக் கொடுத்திருக்கும்.

என் ரசிகர்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்க. படம் நல்லாருந்தா, அதில் உள்ள கலைஞர்களை உற்சாகப்படுத்துங்க. படம் சுமாரா இருந்தா, சோஷியல் மீடியாவை யூஸ் பண்ணி மத்தவங்க மனசை நோகடிக்காதீங்க” என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியை தமிழில் ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கினார்.

‘2.0’ படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் ரிலீஸாக இருக்கிறது. இசை வெளியீட்டு விழாவையே இவ்வளவு பிரமாண்டமாக நடத்திய லைகா நிறுவனம், பட வெளியீட்டை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறது.

 

Social Media
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment