Advertisment

புதிய அத்தியாத்தை தொடங்கிய ஏ.எல்.விஜய்-ஐஸ்வர்யா தம்பதி!

AL Vijay Marriage: தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்த விஜய்க்கு தற்போது 2-வது திருமணம் நடந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AL Vijay marriage

AL Vijay marriage

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவியாளராக பணியாற்றி பிறகு ’கிரீடம்’ படம் மூலம் இயக்குநரானவர் ஏ.எல்.விஜய். முதல் படத்திலேயே அஜித்தை வைத்து இயக்கியவர், பின்னர் விஜய், விக்ரம், ஆர்யா, விக்ரம் பிரபு, பிரபு தேவா உள்ளிட்டவர்களை வைத்து படம் இயக்கினார்.

Advertisment

தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘தலைவி’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை அமலா பாலை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர். தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்த விஜய்க்கு தற்போது 2-வது திருமணம் நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஐஸ்வர்யா என்பவரை அவர் கரம் பிடித்துள்ளார்.

பெற்றோர்கள் நிச்சயித்த இந்தத் திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துக் கொண்டனர்.

Tamil Cinema Al Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment