Advertisment

விஷாலுக்காக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிய தனுஷ்

விஷால் நடித்துவரும் ‘சண்டக்கோழி 2’ படத்துக்காக, பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் தனுஷ்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
விஷாலுக்காக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிய தனுஷ்

விஷால் நடித்துவரும் ‘சண்டக்கோழி 2’ படத்துக்காக, பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் தனுஷ்.

Advertisment

லிங்குசாமி இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் ‘சண்டக்கோழி’. விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண், சூரி ஆகியோர் நடிக்கின்றனர்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் ‘சண்டக்கோழி 2’ படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒரு நடிகரின் படத்தில் இன்னொரு நடிகர் பாடுவது தற்போது ஃபேஷனாகி வருகிறது. அந்த வகையில், இந்தப் படத்திற்காக தனுஷ் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல், நேற்று ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது.

விஷால் தற்போது ‘இரும்புத்திரை’ ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Tamil Cinema Dhanush Vishal Sandakozhi 2 Yuvan Shankar Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment