Advertisment

தனுஷ் தயாரிப்பில் ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’

மலையாளத்தில் வெளியான ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ படத்தை, தமிழில் ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’ என்ற பெயரில் தயாரிக்கிறார் தனுஷ்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
kennedy club teaser

மலையாளத்தில் வெளியான ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ படத்தை, தமிழில் ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’ என்ற பெயரில் தயாரிக்கிறார் தனுஷ்.

Advertisment

நதிர்ஷா இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’. விஷ்ணு உன்னிகிருஷ்ணன் எழுதி, நடித்துள்ள இந்தப் படம், கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீஸானது. காமெடிப் படமான இது, 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்தப் படத்தைத்தான் தமிழில் ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’ என்ற பெயரில் தன்னுடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார் தனுஷ். மலையாளத்தில் இயக்கிய நதிர்ஷாவே தமிழிலும் இயக்குகிறார். விஜய் டிவி தீனா இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்தில், ஏற்கெனவே நடித்துள்ளார் தீனா. அதுவும் சின்ன வயது ராஜ்கிரணாக நடித்த தனுஷின் நண்பனாக நடித்துள்ளார். அந்த நட்பு அடிப்படையிலும், தீனாவின் திறமைக்காகவும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

Tamil Cinema Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment