Advertisment

''அடங்காத அசுரன்''... தனுஷ் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி : ராயல் ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்

தனுஷின் 50-வது படமான ராயன் வரும் ஜூன் 13-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Rayaan Firest

ராயன் படத்தில் தனுஷ்

தனுஷ் நடித்து இயக்கியுள்ள அவரின் 50-வது திரைப்படமான ராயன் படத்தின் ‘’அடங்காத அசுரன்’’ என்ற முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனுஷ், நடிகர் மட்டுமல்லாமல், இயக்குனர் தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், என பன்முக திறமையுடன் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். மேலும் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி தெலுங்கு, ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் தனுஷ் தற்போது தெலுங்கில் தயாராகும் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் அடுத்து ராயன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியாக உள்ள 2-வது படமான இந்த படத்தில், தனுஷ் நாயகனாக நடித்துள்ள நிலையில், எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார், அபர்னா பாலமுரளி, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டாக தயாரித்துள்ளது. தனுஷின் 50-வது படமான ராயன் வரும் ஜூன் 13-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராயன் படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது அடங்காத அசுரன் என்ற முதல் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் எழுதியுள்ள இந்த பாடலை ஏ,ஆர்.ரஹ்மானுடன் இணைந்து தனுஷே பாடியுள்ளார்.

இந்த பாடல் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment