Advertisment

மெழுகு சிலையான மாறிவிட்டாரோ! ஜான்வி கபூர் அசத்தல் க்ளிக்ஸ்

நடிப்பில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜான்வி தனது புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jhanvi Kapoor

நடிகை ஜான்வி கபூர்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. ரஜினி கமல் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

publive-image

இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி குஷி என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தியாவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.  

publive-image

இதில் கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலம் ஜான்வி கபூர் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து  கோஸ்ட் ஸ்டேரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

publive-image

ஜான்வி கபூர் விரைவில், தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதே சமயம் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் சில படங்களை தயாரித்து வருகிறார்.

publive-image

இதனால் அடுத்து ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஆகஸ்ட் 13-ந் தேதி ஸ்ரீதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜான்வி கபூர் வெளியிட்ட புகைப்படம் வைரலானது.

publive-image

நடிப்பில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜான்வி தனது புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

publive-image

அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Cinema Jhanvi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment