Advertisment

சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவர்கள் இருவரும் இணைவது இதுதான் முதல்முறை.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
abhay deol in Sivakarthikeyan's hero movie

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவர்கள் இருவரும் இணைவது இதுதான் முதல்முறை.

Advertisment

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். மேலும், சினேகா, ரோகிணி, ரோபோ சங்கர், சார்லி, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றது இந்தப் படம். இதைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஹீரோயினாக சமந்தாவும், காமெடியனாக சூரியும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது சூர்யா நடிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இந்தப் படம் நாளை ரிலீஸாகிறது. அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவனைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். சயிண்டிஃபிக் படமாக உருவாக உள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் முதல் படம் இது.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment