Advertisment

2வது திருமணமா? நடிகை சோனியா அகர்வால் வெளியிட்ட வீடியோ சொல்வது என்ன?

பத்தாண்டுகளுக்கு முன்பு இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை சோனியா அகர்வால் ட்விட்டரில் தாலி கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளதால் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress sonia agarwal, sonia agarwal second marriage, சோனியா அகர்வால், இரண்டாவது திருமணம், வைரல் வீடியோ, sonia agarwal released second marriage video, viral video, selvaragavan, tamil cinema news, latest tamil cinema news

பத்தாண்டுகளுக்கு முன்பு இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை சோனியா அகர்வால் ட்விட்டரில் தாலி கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளதால் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தெலுங்கு சினிமா மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை சோனியா அகர்வால், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமானார். காதல் கொண்டேன் படம் சோனியா அகர்வாலுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பைக் கொடுத்தது.

publive-image

காதல் கொண்டேன் படத்தை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவனும் சோனியா அகர்வாலும் காதலிக்கின்றனர் என்று கிசுகிசுக்கள் வலம் வந்தன. ஆனால், இருவருமே அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதற்குள், சோனியா அகர்வால், இந்த படத்தை தொடர்ந்து, 7 ஜி ரெயின்போ காலனி, மதுர, கோவில், திருட்டு பயலே என தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லப்படும் புதுப்பேட்டை படத்தில் சோனியா அகர்வால் மீண்டும் தனுஷுடன் நடித்தார். இந்த படத்திற்குப் பின், இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

publive-image

இரண்டு பேரின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்றாலும் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பிறகு, சோனியா அகர்வால் டிவி சீரியல்கள் மற்றும் சில படங்களில் நடித்து வந்தார். அண்மையில், தடம் படத்தில் நடித்த சோனியா அகர்வாலின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

இயக்குனர் செல்வராகவன் மயக்கம் என்ன படத்தில் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகை சோனியா அகர்வால் விவாகரத்து பெற்று 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்துவருகிறார். இந்நிலையில், சோனியா அகர்வால், தனது ட்விட்டர் பக்கத்தில் தாலி கட்டுகிற வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 3 நாட்கள் காத்திருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், சோனியா அகர்வால் 2வது திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று கருதி அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். சிலர் உங்களுக்கு திருமணமா என்று கேள்வி எழுப்பி விசாரித்து வருகின்றனர். சிலர், இது அவர் நடிக்கும் சீரியலின் புரோமோவாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ குறித்து சோனியா அகர்வால் அவரே பதில் அளித்தால்தான் உண்டு. அதுவரை யார் என்ன சொன்னாலும் அது வெறும் யூகம்தான்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Sonia Agarwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment