Advertisment

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை சாய் பல்லவியின் சகோதரி; க்யூட் ரொமாண்டிக் வீடியோ

நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் தனது காதலர் வினீத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிவிப்பு சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலர் புது ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Sai Pallavi Sister Pooja Kannan

நடிகை சாய் பல்லவியின் சகோதரி நடிகை பூஜா கண்ணன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் தனது காதலர் வினீத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிவிப்பு சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலர் புது ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசலாகா சாய் பல்லவி போலவே தோற்றமளிப்பார். இவர் 2021-ம் ஆண்டு ஸ்டண்ட் சில்வா இயக்கத்தில் சமுத்திரக்கனி தந்தையாக நடித்த 'சித்திரை செவ்வானம்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். 

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன், தற்போது சமூக வலைதளங்களில் தனது காதலரை ஒரு ரொமாண்டிக் வீடியோ மூலம் அறிமுகம் செய்து அறிவித்துள்ளார்.

நடிகை பூஜா கண்ணன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ குறித்து குறிப்பிடுகையில், "இந்த அழகான குட்டி பொத்தான் எனக்கு சுயநலமில்லாமல் நேசிப்பதும், பொறுமையாகவும், அன்பில் நிலைத்திருக்கவும், அழகாக இருப்பதற்கும் கற்றுக் கொடுத்தது! இவர் வினீத், இவர் என் சூரிய ஒளி.

பூஜா கண்ணன் பகிர்ந்துள்ள வீடியோவில் பூஜாவும் வினீத்தும் ஒன்றாகக் கழித்த பல தருணங்கள் இடம்பெற்றுள்ளன. பூஜா தனது காதலரை அறிவித்திருப்பது சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் மட்டுமின்றி நடிகை சாய் பல்லவியின் ரசிகர்களும் இணையத்தில் இந்த புது ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் 2021-ல் வெளியான 'சித்திரை செவ்வானம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை 

ஸ்டண்ட் சில்வா இயக்கினர் இந்த படத்தில் பூஜாவின் தந்தையாக நடிகர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sai Pallavi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment