Advertisment

நிறைமாத கர்ப்பிணி காதருகே இப்படியா பாடுவது? காதை பொத்தி கொண்ட அமலாபால்; வைரல் வீடியோ

நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் அமலாபால் காதருகே அவருடைய கணவர் பாடும்போது தாங்க முடியாமல் அமலாபால் காதை பொத்திக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Amala Paul 1

நடிகை அமலாபால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், தனது கர்ப்ப காலத்தை கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிவருகிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை அமலாபால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், தனது கர்ப்ப காலத்தை கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிவருகிறார். நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் அமலாபால் காதருகே அவருடைய கணவர் பாடும்போது தாங்க முடியாமல் அமலாபால் காதை பொத்திக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பினியாக இருக்கிறார். அவருக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாபால், தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாயைத் திருமணம் செய்துகொண்டதில் இருந்து, அவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

திருமணத்தை தொடர்ந்து, நடிகை அமலாபால் கர்ப்பமானதில் இருந்து தனது ஒவ்வொரு அசைவையும் கணவருடனான மகிழ்ச்சியான தருணங்களையும் சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அமலாபால் தனது கர்ப்ப காலத்தை சந்தோஷமாகக் கொண்டாடி வருகிறார். அண்மையில், அமலாபாலுக்கு வளைகாப்பு நடந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் அமலாபால் கணவரின் பாட்டு தொல்லை தாங்காமல் அவர் காதை பொத்திக் கொள்ளும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அமலாபால் காதருகே அவருடைய கணவர் ஜெகத் தேசாய் செல்லமாக நாட்டியாக சத்தமாகப் பாடுகிறார். கணவரின் பாட்டுத் தொல்லையை தாங்க முடியாமல் அமலாபால் விரலால் காதை பொத்திக்கொள்கிறார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், நிறைமாத கர்ப்பிணியிடம் இப்படியா நடந்து கொள்வது? நிறைமாத கர்ப்பிணியின் காதருகே இப்படியா பாடுவது என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ் உட்பட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள சினிமாவிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் காடவர், ஆடை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்தார். அமலாபால், நடிகர் பிரித்விராஜ் உடன் சேர்ந்து நடித்த ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment