Advertisment

ஷங்கர் மகளின் ஹல்தி நிகழ்ச்சி... மஞ்சள் ஆடையில் நடிகை அதிதி ஷங்கர் மாஸ் டான்ஸ்; போட்டோஸ் வைரல்

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் ஹல்தி நிகழ்ச்சியில் அவருடைய தங்கையும் நடிகையுமான அதிதி ஷங்கர் மாஸ் டான்ஸ் ஆடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Aditi shankar

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் ஹல்தி நிகழ்ச்சியில் அவருடைய தங்கையும் நடிகையுமான அதிதி ஷங்கர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், ஐஸ்வர்யாவின் ஹல்தி நிகழ்ச்சியில் அவருடைய தங்கையும் நடிகையுமான அதிதி ஷங்கர் மாஸ் டான்ஸ் ஆடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

Advertisment

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் இயக்குநர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அதிதி என 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி ஷங்கர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். 

Aditi 1

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கருக்கு, கடந்த 2022-ம் ஆண்டு புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித்திற்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் கொரோனா காலகட்டத்தில் நடந்ததால், ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். 

கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு, ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா, கணவர் ரோஹித்தை விட்டு பிரிந்து தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார்.

Aditi Shankar

தனது மகள் ஐஸ்வர்யா திருமணமாகி 6 மாதங்களுக்குள் கணவருடன் சேர்ந்து வாழாமல் வீட்டுக்கு வந்துவிட்டதை நினைத்து வேதனைப்பட்ட இயக்குனர் ஷங்கர், தனது மகளுக்கு முறையாக விவாகரத்து பெற்று, தருண் கார்த்திகேயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தார். 

Aditi shankar 2

ஐஸ்வர்யா - தருண் கார்த்திகேயன் திருமண விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, கார்த்திக், மணிரத்னம், சுஹாசினி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் என சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். 

இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு நடைபெற்ற ஐஸ்வர்யாவின் ஹல்தி சடங்கு நிகழ்ச்சியில், அவருடைய தங்கையும் நடிகையுமான அதிதி ஷங்கர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Aditi Shankar

ஐஸ்வர்யாவின் ஹல்தி நிகழ்ச்சியில், ஷங்கரின் குடும்பத்தினர் அனைவரும் மஞ்சள் உடையில் இருண்டனர். குறிப்பாக நடிகை அதிதி ஷங்கர்  அனைவரையும் கவரும் விதமாக மஞ்சள் உடையில் காணப்படுகிறார். அதுமட்டுமில்லாமல், அதிதி ஷங்கர் மஞ்சள் தேவதைப் போல டான்ஸ் ஆடிய புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

Aditi Shankar 3

மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் முடிந்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கு விருது அளித்த இயக்குனர் ஷங்கர், என் இத்தனை ஆண்டு வளர்ச்சிக்கு நீங்க தான் காரணம், அனைவரும் மணமக்களை வாழ்த்துங்கள் என்று கூறினார்.

Aditi Shankar

இதையடுத்து பேசிய ஷங்கரின் மருமகன் தருண், தான் சினிமாவில் உதவி இயக்குநர் இல்லை என்று கூறினார். மேலும், தான் அமெரிக்காவில் ஒரு சாஃப்ட்வேர் இஞ்ஜினியராக பணியாற்றி வருவதாகவும், சினிமா மீது அதிக ஆர்வம் இருப்பதாகவும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aditi shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment