Advertisment

தீபாவளி ரிலீஸ் படங்களின் கன்ஃபார்ம் லிஸ்ட்

விஜய்யின் ‘மெர்சல்’, வைபவின் ‘மேயாத மான்’, சரத்குமாரின் ‘சென்னையில் ஒருநாள் 2’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாகின்றன. ‘கொடிவீரன்’, ‘சொல்லிவிடவா’ ஆகிய படங்கள் ரிலீஸாகவில்லை.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
மெர்சல் - விமர்சனம்

தீபாவளிக்கு இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில தினங்களே உள்ளன. தீபாவளி விடுமுறை நிறைய நாட்கள் இருக்கும் என்பதால், இதுபோன்ற விடுமுறை நாட்களில் பெரிய படங்கள் ரிலீஸாவது வழக்கம். பொதுவாக, தீபாவளிக்கு இரண்டு தினங்கள் முன்னரே படங்கள் ரிலீஸாகிவிடும். ஆனால், இந்த முறை புதன்கிழமையில் தீபாவளி வருவதால், அன்றைய தினம்தான் படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.

Advertisment

‘தீபாவளி’ போன்ற விழாக் காலங்களில் 10 நாட்களுக்கு முன்னரே புக்கிங் தொடங்கிவிடும். ஆனால், ‘மெர்சல்’ படத்துக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலும், தமிழக அரசின் கேளிக்கை வரியால் கடந்த 6ஆம் தேதியில் இருந்து நேற்றுவரை நடந்துவந்த போராட்டமும் புக்கிங்கைத் தள்ளி வைத்துள்ளன. “திங்கட்கிழமை முதல் புக்கிங் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்.

இந்த தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரிலீஸாகின்றன?

விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்தே தீரவேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட். விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

நீண்ட இடைவேளைக்குப் பின் விஜய் - வடிவேலு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அதுமட்டுமல்ல, வடிவேலு - கோவை சரளா கூட்டணியும் பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் இணைந்துள்ளது. இவர்களுடன் சத்யராஜ், சத்யன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

meyatha maan, vaibhav, priya bavani sankar

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள ‘மேயாத மான்’ படமும் தீபாவளிக்கு ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சின்னத்திரையில் கலக்கிய பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ரத்னகுமார் இயக்கியுள்ள இந்தப் படம், ‘மது’ என்ற பெயரில் ஏற்கெனவே குறும்படமாக வெளிவந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் - பிரதீப் குமார் இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளனர்.

chennaiyil oru naal 2, sarath kumar

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சென்னையில் ஒருநாள் 2’ படமும் தீபாவளி ரிலீஸ் போட்டியில் இணைந்துள்ளது. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ட்ராபிக்’ படத்தை, ‘சென்னையில் ஒருநாள்’ என ஏற்கெனவே ரீமேக் செய்தனர். சரத்குமார், சேரன், ராதிகா, ஜெயப்பிரகாஷ் நடித்த அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. இதில், சரத்குமார், அஜய், நெப்போலியன், சுஹாசினி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஜே.பி.ஆர். இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சசிகுமாரின் ‘கொடிவீரன்’, அர்ஜுன் தன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை வைத்து இயக்கிய ‘சொல்லிவிடவா’ போன்ற படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.

Tamil Cinema Mersal Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment