Advertisment

விஜய் - பிரபுதேவா படத்தில் 12 பாடல்கள்

‘கரு’ படத்தில் சாம்.சி.எஸ்.ஸின் இசை பிடித்துப்போக, இந்தப் படத்திலும் அவரையே இசையமைப்பாளராக்கி விட்டார் விஜய்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
al vijay and prabhu deva

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க இருக்கும் படத்தில், மொத்தம் 12 பாடல்கள் இடம்பெறுகிறதாம்.

Advertisment

சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் ‘கரு’ படத்தை இயக்கியுள்ளார் விஜய். அபார்ஷனை மையமாகக் கொண்டு, த்ரில்லர் படமாக இதை இயக்கியுள்ளார் விஜய். ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள விஜய், முதன்முறையாக ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.ஸுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘கரு’ படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்ட விஜய், அடுத்ததாக பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தைத் தொடங்கிவிட்டார். ‘தேவி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மறுபடியும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ‘வடசென்னை’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் தற்போது நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மணிரத்னம் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

விஜய் இயக்கும் படத்தில், முக்கிய கேரக்டரில் கருணாகரன் நடிக்கிறார். ‘கரு’ மற்றும் ‘2.0’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நீரவ் ஷா, இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ‘கரு’ படத்தில் சாம்.சி.எஸ்.ஸின் இசை பிடித்துப்போக, இந்தப் படத்திலும் அவரையே இசையமைப்பாளராக்கி விட்டார் விஜய். நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், மொத்தம் 12 பாடல்கள் இடம்பெறுகிறது என்கிறார்கள்.

Aishwarya Rajesh Prabhu Deva Sam Cs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment