Advertisment

சாதிய வன்கொடுமையிலும் சாதித்த மாணவன்: மேற்படிப்பு பொறுப்பை ஏற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்

திருநெல்வேலி நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவன் 12-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற நிலையில், அவரது மேற்படிப்புக்கு பொறுப்பு ஏற்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Nellai caste violence NANGUNERI student pass 12th result Anbil Mahesh announces higher education Tamil News

திருநெல்வேலி: சாதிய வன்முறை கொடூர தாக்குதலுக்கு ஆளான மாணவர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க.சண்முகவடிவேல்

Advertisment

Anbil Mahesh | 12th Exam Mark | Thirunelveli: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (06.05.2024) காலை வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். 

இத்தகைய சூழலில் சாதிய வன்முறை கொடூர தாக்குதலுக்கு ஆளான மாணவர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த தேர்வில் அவர், தமிழ்-71, ஆங்கிலம்-93, பொருளியல்-42, வணிகவியல்-84, கணக்குப்பதிவியில்-85, கணினி அறிவியல்-94 என மொத்தம் 469  மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து மாணவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சாதீய வன்கொடுமை காரணமாக பாதிக்கப்பட்டேன். 4 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். படிப்பதற்கு ஆசிரியர்கள் உதவி செய்தனர். அதன் பின்னர் பள்ளிக்குச் சென்று படித்தேன். அங்கேயும் நன்றாக படிக்க சொல்லி கொடுத்தனர். மாணவர்களும் உதவி செய்தனர். 469 மதிப்பெண்கள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வணிகவியல் (COMMERCE) படிப்பை முடித்துவிட்டு பட்டய கணக்கர் (C.A.) ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார். 

இந்தநிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று மாணவர் சின்னதுரையை அலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, மாணவர் விரும்பும் உயர் கல்விக்கான அனைத்துவித நிதி உதவிகளை தானே ஏற்றுக் கொள்வதாகவும் உறுதியளித்தார். மாணவர் தன்னை தொடர்புகொள்ள ஏதுவாக தனது அலைபேசி மற்றும் தனது துறை உதவியாளர்களின் தொலைபேசி எண்ணையும் வழங்கி மேல்படிப்புக்கு தன்னை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Anbil Mahesh 12th Exam Mark Thirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment