Advertisment

NEET UG 2024: நீட் தேர்வு ரிசல்ட் எப்போது? மதிப்பெண் முறை என்ன?

NEET UG 2024: நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? ஆன்சர் கீ எப்போது வெளியிடப்படும்? நீட் தேர்வுக்கான மதிப்பெண் முறை என்ன?

author-image
WebDesk
New Update
TN SSLC 10th Result 2024

நீட் தேர்வு ரிசல்ட் வெளியாகும் தேதி அறிவிப்பு (எக்ஸ்பிரஸ் பிரதிநிதித்துவ படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

NEET UG 2024: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG) விண்ணப்பதாரரின் விடைத் தாள் மற்றும் விடைக் குறிப்புகளை தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் வெளியிடும். நீட் தேர்வு மே 5 ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீட் விடைக்குறிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2024 answer key, OMR response sheet soon; NTA marking scheme, result date

நீட் விடைக்குறிப்புடன் விண்ணப்பதாரர்களின் OMR பதில் தாள்களும் வெளியிடப்படும். விடைக்குறிப்புகளை வெளியிடுவதற்கான தேதியை தேசிய தேர்வு முகமை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை 571 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் நடத்தியது. வெளிநாடுகளில் 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 24 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்துக் கொண்டனர். விண்ணப்பதாரர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்ததாக கூறுகின்றனர்.

நீட் தேர்வு வினாத்தாள் - இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒவ்வொரு பாடமும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. பிரிவு A இல் 35 கேள்விகளும், பிரிவு B 15 கேள்விகளும் இருந்தன. B பிரிவில் உள்ள 15 கேள்விகளில், விண்ணப்பதாரர்கள் ஏதேனும் 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

நீட் தேர்வு: பிரிவு A மதிப்பெண் முறை

- சரியான பதில் அல்லது மிகவும் பொருத்தமான பதில்: நான்கு மதிப்பெண்கள் (+4)

- ஏதேனும் தவறான பதில் குறிக்கப்பட்டால், ஒரு மதிப்பெண் (-1) கழிக்கப்படும்.

- பதிலளிக்கப்படாத/மதிப்பாய்வுக்காகக் குறிக்கப்பட்டிருந்தால் மதிப்பெண் (0) வழங்கப்படாது.

ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பத்தேர்வுகள் சரியெனக் கண்டறியப்பட்டால், சரியான விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைக் குறித்தவர்களுக்கு மட்டும் நான்கு மதிப்பெண்கள் (+4) வழங்கப்படும். இருப்பினும், அனைத்து விருப்பங்களும் சரியானவை எனக் கண்டறியப்பட்டால், கேள்வியை முயற்சித்த அனைவருக்கும் நான்கு மதிப்பெண்கள் (+4) வழங்கப்படும்.

விருப்பத்தேர்வுகள் எதுவும் சரியாகக் காணப்படவில்லை அல்லது ஒரு கேள்வி தவறாகக் கண்டறியப்பட்டால் அல்லது ஒரு கேள்வி கைவிடப்பட்டால், கேள்வி முயற்சி செய்யப்பட்டதா அல்லது முயற்சிக்கவில்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் தேர்வெழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நான்கு மதிப்பெண்கள் (+4) வழங்கப்படும். 

NEET UG 2024: பிரிவு B மதிப்பெண் முறை

விண்ணப்பதாரர்கள் 10 கேள்விகளுக்கு மேல் முயன்றால், முதல் 10 கேள்விகள் மட்டுமே மதிப்பீட்டிற்கு பரிசீலிக்கப்படும்.

- சரியான பதில்: நான்கு மதிப்பெண்கள் (+4)

– தவறான பதில்: ஒரு மதிப்பெண் கழித்தல் (-1)

- பதிலளிக்கப்படாத/மதிப்பாய்வுக்காகக் குறிக்கப்பட்டிருந்தால் மதிப்பெண் வழங்கப்படாது (0)

ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பத்தேர்வுகள் சரியானதாகக் கண்டறியப்பட்டால், சரியான விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைக் குறித்தவர்களுக்கு மட்டுமே நான்கு மதிப்பெண்கள் (+4) வழங்கப்படும், எல்லா விருப்பங்களும் சரியானவை எனக் கண்டறியப்பட்டால் கேள்வியை முயற்சித்த அனைவருக்கும் நான்கு மதிப்பெண்கள் (+4) வழங்கப்படும். 

ஒரு கேள்வி தவறாக இருப்பதாகக் கண்டறியப்பட்டாலோ அல்லது கேள்வி கைவிடப்பட்டாலோ, கேள்வியை முயற்சித்த அனைவருக்கும் நான்கு மதிப்பெண்கள் (+4) வழங்கப்படும். காரணம் மனித பிழை அல்லது தொழில்நுட்ப பிழை காரணமாக இருக்கலாம்.

கேள்விகளில் கொடுக்கப்பட்ட (ஏதேனும் இருந்தால்) மாறிலிகளைக் கொண்டு கணக்கீடுகளைச் செய்ய விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment