Advertisment

நீங்கள் பணக்காரராக வேண்டுமா? இந்தியாவில் அதிகமான சம்பளத்தை வாரி வழங்கும் 10 துறைகள்

அதிக சம்பளம் அளிக்கும் 10 வேலை வாய்ப்புகள் குறித்தும், ஆண்டுக்கு அவர்களின் வருமானம் எந்தளவில் இருக்கும் என்பதையும் காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
private job fair

Private job Mela, Job Fair in chennai, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலைக்கு சேர்ந்த உடனேயே லட்சங்களில் சம்பளம் அளிக்கும் பல வேலை வாய்ப்புகள் உள்ளன. அவற்றுக்கு அந்த துறை குறித்த ஆழ்ந்த அறிவு மற்றும் முறையான தகுதி இருக்க வேண்டும். அப்படி அதிக சம்பளம் அளிக்கும் 10 வேலை வாய்ப்புகள் குறித்தும், ஆண்டுக்கு அவர்களின் வருமானம் எந்தளவில் இருக்கும் என்பதையும் காணலாம்.

Advertisment

1. நிர்வாகம்:

எல்லா நிறுவனத்திற்கும் முக்கியமானவர்கள் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பணிபுரிபவர்கள் தான். அந்த நிறுவனத்திற்கான குறிப்பிட்ட பணிகளை நிர்வகிப்பது தான் இவர்களுடைய பணி. இந்த பணியில் நுழைவதற்கே கடும் முயற்சி செய்ய வேண்டும். ஆனால், இதில் நுழைந்து விட்டீர்கள் என்றால் அதிலிருந்து திரும்ப முடியாது.

ஆரம்ப நிலை - ரூ. 3,00,000

அடுத்த நிலை - ரூ.25,00,000

அனுபவம் பெற்றவர்கள் - ரூ.80,00,000

2. முதலீட்டு வங்கியாளர்கள்:

இவர்கள் ஒரு நிறுவனத்திற்கு லாபத்தை உயர்த்துவதிலும், நிதி நிலைமை தொடர்பாக நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரம்ப நிலை - ரூ.12,00,000

அடுத்த நிலை - ரூ.30,00,000

அனுபவம் பெற்றவர்களுக்கு - ரூ.50,00,000

3. பட்டய கணக்காளர்கள்: (சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்)

தொழில் மற்றும் கணக்கு ஆகியவை குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் மிகவும் மரியாதைக்குரிய பணியாக பட்டய கணக்காளர் பணி பார்க்கப்படுகிறது.

ஆரம்ப நிலை: ரூ. 5,50,000

அடுத்த நிலை: ரூ. 12,80,000

அனுபமிக்கவர்களுக்கு: ரூ.25,70,000

4. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சார்ந்த தொழில்கள்:

பெரும் லாபம் தரக்கூடியது இத்தொழில். புவியியலாளர்கள், கடற்சார் பொறியியல் வல்லுநர்கள் உள்ளிட்டவர்கள் இத்தொழிலில் கோலோச்ச முடியும்.

அனுபவமிக்கவர்களுக்கு - ரூ.15-20 லட்சம் வரை

5. தொழில் ஆய்வாளர்:

இந்தியாவில் தொழில்களுக்கான போட்டி அதிகரித்திருக்கும் நிலையில், அவை சார்ந்த அறிவார்ந்த ஆலோசனைகளை வழங்குவதுதான் இவர்களின் பணி. புதிய தொழில்நுட்பம், கணிதம், தொழில்சார் அறிவு ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.

ஆரம்பநிலையில், ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறலாம்.

6. மருத்துவம் சார் தொழில்கள்:

மந்தமே இல்லாத ஒரு துறை மருத்துவம்.

பொது மருத்துவம்: ரூ.4,80,000

அறுவைசிகிச்சை நிபுணர்: ரூ.8,10,000

மருத்துவர்: ரூ.17,00,000

7. விமான போக்குவரத்து:

இவர்களுடைய சம்பளத்திற்கு வானம் தான் எல்லை.

விமானி: ரூ.20,00,000

ஹெலிகாப்டர் விமானி: ரூ.18,00,000

விமான பொறியாளர்: ரூ.9,80,000

8. சட்டம்:

உயர்ந்த கல்வி, பொறுமை, தொடர்பியல் திறன்கள் ஆகியவற்றை வழக்கறிஞர்கள் பெற்றிருக்க வேண்டும். சிறந்த வழக்கறிஞர்கள் ஒரு விசாரணைக்கே அதிக சம்பளத்தை பெறுவர்.

வழக்கறிஞர்: ரூ.6,10,000

மூத்த வழக்கறிஞர்: ரூ.9,50,000

9. மார்க்கெட்டிங்:

மார்க்கெட்டிங் ஒரு கலை. அந்த கலையை கற்றுக்கொண்டால் பெறும் சம்பளத்தை பெறலாம். இந்த துறை சார்ந்த ஆழ்ந்த அறிவு கொண்டிருப்பவர்கள் ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அலுவலர் பொறுப்பையே பெறலாம்.

ஆரம்ப நிலை: ரூ.1,50,000

அடுத்த நிலை: ரூ.5,00,000

அனுபமிக்கவர்கள்: ரூ.10,00,000+

10. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சார்ந்த துறை:

கணினி மற்றும் கணினி மொழி நன்றாக தெரிந்தவர்கள், இந்த துறையில் அதிக சம்பளத்துடன் சாதிக்கலாம்.

ஆரம்ப நிலை: ரூ.3,50,000

அடுத்த நிலை: ரூ.8,30,000

அனுபவமிக்கவர்களுக்கு: ரூ.15,50,000

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment