Advertisment

பிளிப்கார்ட்டுடன் இணைப்பு பேச்சுவார்த்தை நிறுத்தம்: தனியாக செயல்பட ஸ்நாப்டீல் முடிவு

பிளிகார்ட்டுடன் இணைக்கும் பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ள ஸ்நாப்டீல் நிறுவனம், தனியாக செயல்பட முடிவு செய்துள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிளிப்கார்ட்டுடன் இணைப்பு பேச்சுவார்த்தை நிறுத்தம்: தனியாக செயல்பட ஸ்நாப்டீல் முடிவு

பிளிகார்ட்டுடன் இணைக்கும் பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ள ஸ்நாப்டீல் நிறுவனம், தனியாக செயல்பட முடிவு செய்துள்ளது.

Advertisment

ஸ்நாப்டீல் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் 30 சதவீத பங்குகளும், நெக்ஸஸ் 10 மற்றும் கலாரி 8 சதவீத பங்குகளையும் வைத்திருக்கின்றன. ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்துள்ளதால், ஸ்நாப்டீல் நிறுவனத்தை விற்பதற்கான பேச்சுவார்த்தையை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

தொடர்ந்து, ஸ்நாப்டீலை, பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக, ஸ்நாப்டீல் நிறுவனர்கள், இயக்குனர் குழு, முக்கிய முதலீட்டாளரான கலாரி கேபிடல் ஆகியவற்றிடம் கடந்த ஏப்ரல் மாதமே சாப்ட்பேங்க் அனுமதியை பெற்று விட்டது. பின்னர், அதற்கு அடுத்த மாதத்தில் மற்றொரு முதலீட்டு நிறுவனமான நெக்ஸஸ் நிறுவனமும் விற்பனைக்கு ஒப்புக் கொண்டது.

நிறுவனங்கள் இணைப்பு தொடர்பாக முதலீட்டாளர்கள், நிறுவனர்களிடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்த நிலையிலும், இணைப்பு ஏற்படாமல் இழுபறி நிலவி வந்தது. "நிறுவன இணைப்புக்கு பின்னர், நிதி இழப்பு உள்ளிட்ட ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க இரண்டாண்டுகளுக்காவது இழப்பு காப்பீடு வழங்க வேண்டும். பிளிப்கார்ட் நிறுவனம் செய்யும் தொழில் போன்றே, தொழில் செய்யும் வேறு நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல் தடுக்கும் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றுக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்" என பிளிப்கார்ட் நிறுவனம் கோரியதாகவும், அதற்கு இணங்க ஸ்நாப்டீல் மறுத்ததுமே, இணைப்பு இழுபறிக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது.

ஸ்நாப்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கு பிளிப்கார்ட் நிறுவனம் 95 கோடி டாலர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை ஏற்க ஸ்நாப்டீல் இயக்குநர் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்துடனான இணைப்பு நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக ஸ்நாப்டீல் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஸ்நாப்டீல் நிறுவனம் தொடந்து தனியாகவே இயங்கும் என தெரிவித்துள்ள அவர், புதிய மற்றும் கவர்ந்திழுக்கும் அம்சங்களுடன் செயல்பாட்டை நிறுவனம் தொடர உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்நாப்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிரீசார்ஜை ரூ.385 கோடிக்கு விற்பதற்கு ஆக்ஸில் வங்கியிடம், ஸ்நாப்டீல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Flipkart Snapdeal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment